தமிழக செய்திகள்

சர்ச்சை கடிதம் வெளியிட்ட மத போதகர் அதிரடி கைது

விநாயகர் சதுர்த்தி விழா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கடிதம் வெளியிட்ட மத போதகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை பி.என்.ஜி.புதூரில் உள்ள செயின்ட் பால் மகளிர் கல்லூரி தாளாளரும், கிறிஸ்தவ மத போதகருமான டேவிட் என்பவர் விநாயகர் சதுர்த்தி பற்றி சர்ச்சைக்குரிய கடிதம் ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.

அந்த கடிதத்தில் வருகிற10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்று கிறிஸ்தவர்கள் வாழும் ஊர்களில் வாகனங்களில் ஜெப யாத்திரை நடத்த வேண்டும். 3 ஆண்டுகளாக இந்த சிறப்பு ஜெப யாத்திரையை விநாயகர் சதுர்த்தியன்று நடத்தி வருகிறோம்.

இந்து அமைப்பினர் கண்டனம்

கடந்த 2017-ம் ஆண்டு 200 வாகனங்களிலும், 2018-ம் ஆண்டு 1000 வாகனங்களிலும், 2019-ம் ஆண்டு ஜெப யாத்திரை நடத்தினோம். இதன் விளைவாக கலெக்டர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைகளின் அளவு, இடம், ஊர்வலம், கரைக்கும் நேரம் குறித்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் சிலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த ஆண்டு அதைவிட சிறப்பாக செப்டம்பர் 8, 9,10 -ந் தேதிகளில் ஏதாவது ஒருநாள் ஜெப யாத்திரை நடத்துங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அறிந்த இந்து அமைப்பினர் மத போதகரின் கடிதத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணியினர் நேற்று முன்தினம் துடியலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு கொடுத்தனர்.

மதபோதகர் கைது

இதையடுத்து மத மோதலை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் கடிதம் வெளியிட்ட மதபோதகர் டேவிட் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். நேற்று அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...