Image courtesy : timesofindia.com 
தமிழக செய்திகள்

ரெம்டெசிவிர் வழக்கு: கைதானவர்கள் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.1 லட்சம் மோசடி 2 போலீசார் சஸ்பெண்டு

ரெம்டெசிவிர் வழக்கில் கைதானவர்கள் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.1 லட்சம் அபகரித்த போலீசார் மீது உறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை

சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்று கைதானவர்களின், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஒரு லட்சம் ரூபாயை அபகரித்த குற்றச்சாட்டில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர் உள்பட ஐந்து பேரை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில், கைதானவர்களின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி, ஒரு லட்ச ரூபாயை அபகரித்ததாக தனிப்படை உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமைக் காவலர் சரவணக்குமார் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இருவரையும் சஸ்பெண்டு செய்து சென்னை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது