தமிழக செய்திகள்

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கம் - எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.வி.ராஜு நோட்டீஸ்

தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ஏ.வி.ராஜு கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சமீபத்தில் கூவத்தூர் விவகாரம் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறிய அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.வி.ராஜூவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில்,தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நீக்கம் தொடர்பான அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க. உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு. தன்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்