தமிழக செய்திகள்

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட மீனாட்சி நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட மீனாட்சி நகர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வீடுகளை இடிப்பதற்காக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்றினர்.

தினத்தந்தி

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ராஜாஜிபுரம் தேவி மீனாட்சி நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அதன் அருகே உள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சுமார் 20 வீடுகள் கட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து இருந்தவர்களுக்கு நேட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து 2015-ஆம் ஆண்டு வீடுகளை கட்டி இருந்தவர்கள் காலி செய்து வெளியே சென்று விட்டனர். ஆனால் 2 வீட்டார் மட்டும் காலி செய்யாமல் இருந்து வந்தனர்.

இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அனைத்து வீடுகளையும் இடிப்பதற்காக நேற்று திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அனைத்து ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்றினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து