தமிழக செய்திகள்

திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: கு.க செல்வம்

திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: என்று ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை. இதுவரை நான் எந்த கட்சியிலும் இணையவில்லை.

ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறும் வாய்ப்பு எனக்கு உள்ளது. யார் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சி சார்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை. திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது கடிதத்திற்கு பதில் கடிதம் கூட திமுக தரவில்லை. திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள் என்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...