Image courtesy : Getty Image 
தமிழக செய்திகள்

மதுரை, திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது விற்பனை தொடங்கியுள்ளது.மதுரை, திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது

தினத்தந்தி

சென்னை

மதுரையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. சென்னையை தொடர்ந்து மதுரையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையானது துவங்கியுள்ளது. மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனையானது தொடங்கியுள்ளது. 500 குப்பிகள் இன்று விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு அதிகபட்சம் 6 குப்பிகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

83 நபர்களுக்கு வழங்குவதற்கான ரெம்டெசிவிர் மருந்து இன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு குப்பி 1568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவர் பரிந்துரை கடிதம், நோயாளிகள் மற்றும் மருந்து வாங்க வருபவர்களின் ஆதார் அட்டை நகலை கொண்டுவர வேண்டும்.

அதுபோல் திருச்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது. உரிய ஆவணங்களை தருவோருக்கு ஒரு ரெம்டெசிவிர் மருந்து ரூ.1,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது விற்பனை தொடங்கியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை