திருச்சி,
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்திற்கான பணத்தை போக்குவரத்துத்துறை செலவு செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.
இதற்கான பணத்தை சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து போக்குவரத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்கள் வாழ்வில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.