தமிழக செய்திகள்

எழும்பூர் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: மின்சார ரெயில்கள் 5, 6-வது நடைமேடைகளில் இயக்கப்படும் என அறிவிப்பு

சில மின்சார ரெயில் சேவைகள் பகுதிநேரமாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக் கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ந்தேதி (புதன்கிழமை) வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை (8 மணி நேரம்) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இயக்கப்படும்.

இதில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையிலும், மறுமார்க்கமாக செல்லும் ரெயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படும். இதன் காரணமாக சில மின்சார ரெயில் சேவைகள் பகுதிநேரமாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. அதன் விவரம் வருமாறு:-

* இன்று முதல் 18-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8.55, 10.20, 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரெயில் சேவைகள் முழுவதுமாகவும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 9.05, 10.10, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில் சேவைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதிநேரமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

* இன்று மற்றும் 15-ந்தேதிகளில்(ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.30, 10.00, 11.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகளும், தாம்பரத்தில் இருந்து இரவு 10.00, 11.00, 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.