தமிழக செய்திகள்

புவனகிரி பேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்கு எண்ணிக்கையின்போது எந்திரம் பழுது ஏற்பட்டதால் புவனகிரி பேரூராட்சியில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் வார்டு எண்-4, வாக்குச்சாவடி எண்-4ல் பதிவான மின்னணு வாக்குகளை எந்திரத்தில் நேற்று எண்ணும் போது, எந்திரத்தின் திரையிடும் பகுதியில் பழுது ஏற்பட்டது. கட்டுப்பாட்டு கருவியை பெல் நிறுவனத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் பழுது பார்த்தும் குறையை நிவர்த்தி செய்ய முடியவில்லை.

எனவே கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி திருவள்ளுவர் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை (வியாழக்கிழமை) மறு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும். அன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவுகள் முடிந்தவுடன் மேற்குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து