தமிழக செய்திகள்

“அறிக்கை நாயகன் என்பதால் அறிக்கை கேட்கிறார்” - மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்பதால் அவர் அறிக்கை கேட்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், கொரோனா கால கொள்முதல் குறித்து தனி வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்பதால் அவர் அறிக்கை கேட்பதாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் செயல் நாயகன் என்பதால் செயல்படுகிறார், ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்பதால் அறிக்கை கேட்கிறார். ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை, கருப்பு அறிக்கை கேட்கிறார் என்று தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை