கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் எம்.பி.சி, பி.சி. என்ற பிரிவுகளை தான் பதிவு செய்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக உள்ளது.எனினும், அப்பள்ளிகளில் ஆங்கிலத்திலும் பயிற்று மொழியாக வகுப்புகள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்றும், மாறாக அப்பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி வகுப்பு இல்லை என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்களிடம் சாதி பெயரை கேட்பதாக வெளியான தகவல் தவறானது. பள்ளிகளில் எம்.பி.சி, பி.சி. என்ற பிரிவுகளை தான் பதிவு செய்கிறோம். திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதி குறித்து பள்ளிக் கல்வித்துறையில் விருப்ப அடிப்படையிலேயே பதிவு செய்யப்படுகிறது. சில அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி வகுப்பு இல்லை என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து