சென்னை,
சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியை ஏற்றி வைத்து, சேவாதள அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், டாக்டர் செல்லக்குமார் எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், ஆர்.டி.ஐ. பிரிவு துணைத் தலைவர் மயிலை தரணி உள்பட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு, த.மா.கா
சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேசிய கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தேசிய கொடியை ஏற்றினார். அப்போது த.மா.கா. பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மகளிரணி செயலாளர் ராணி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் நீதி மய்யம்
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர்கள் சிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம், முரளி அப்பாஸ், சினேகா மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலையில் சரத்பாபு ஏழுமலை தேசிய கொடியை ஏற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஜிலில் அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர், துணை தலைவர் நவாஸ் கனி எம்.பி., தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சி
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் டி.மகாலிங்கம் தலைமையில் பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தேசிய கொடி ஏற்றினார். அக்கட்சியின் தலைமை பேச்சாளர் எஸ்.டி.வேந்தன், சென்னை மண்டல தலைமை நிலைய செயலாளர் புரசை டி.நாகப்பன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.
சமத்துவ மக்கள் கழகத் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தேசிய கொடியை ஏற்றினார். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் தேசிய கொடியை ஏற்றினார்.