தமிழக செய்திகள்

குடியரசு தினவிழாவை எளிய முறையில் கொண்டாட வேண்டும் - பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் குடியரசு தினவிழாவை எளிய முறையில் கொண்டாட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் 72-வது குடியரசு தினவிழா 26-ந் தேதி (நாளை மறுதினம்) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய நாளில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றலாம்.

குடியரசு தின விழாவினை கொரோனா காரணமாக தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.