தமிழக செய்திகள்

பெண்கள் வார்டுக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

பெண்கள் வார்டுக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி, நெடுங்குளம், கொடிக்குளம், சேதுநாராயணபுரம், பட்டுப்பூச்சி, சுந்தரபாண்டியம், மகாராஜபுரம், தம்பிபட்டி, மேலக்கோபலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுவதற்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 92 படுக்கைகள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் தனி தனியாக சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளன.

இந்தநிலையில் இங்குள்ள பெண்கள் வார்டு கட்டிடம் சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. ஆதலால் தற்காலிகமாக குழந்தைகள் வார்டில் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே சேதமடைந்த பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு பெண்கள் வார்டுக்கு புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்