தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பிரசார செயலாளர் பொய்யாமொழி தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், அம்பிகா உள்பட நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமுவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அறந்தாங்கி தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.