தமிழக செய்திகள்

குட்டை சகதியில் சிக்கித்தவித்த சினைப்பசு மாடு மீட்பு: தீயணைப்பு வீரர்களுக்கு மக்கள் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனியில் குட்டை சகதியில் சத்யன் என்பவருக்கு சொந்தமான சினைப் பசுமாடு சிக்கி உயிருக்கு போராடியது.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனியில் குட்டை சகதியில் சத்யன் என்பவருக்கு சொந்தமான சினைப் பசுமாடு சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும் போக்குவரத்து அலுவலர் புன்னவனகட்டி, ஏட்டு யோகமணி சங்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தவசி, சக்திவேல், வெங்கடசாமி ஆகியோர் துரிதமாக செயல்பட்டு குட்டையில் இறங்கி பல மணி நேரம் போராடி கயிறுகள் மூலம் சினைப் பசு மாட்டினை சகதியிலிருந்து பத்திரமாக உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்பு வீரர்களின் சிறப்பான சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு