தமிழக செய்திகள்

தீர்மானம்

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய மாநாடு கீழையூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் பர்ணபாஸ் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் சம்பந்தம், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பேசினர். மாநாட்டில், தண்ணீர் இன்றி குறுவை பயிர் கருகி வருகிறது. எனவே குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்