தமிழக செய்திகள்

நெற்கட்டும்செவலில் 307-வது பிறந்த நாள் விழா: பூலித்தேவன் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மரியாதை

வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் நடந்த பிறந்தநாள் விழாவில் பூலித்தேவன் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

தினத்தந்தி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் நடந்த பிறந்தநாள் விழாவில் பூலித்தேவன் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 1-ந்தேதி அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்முத்தையா பாண்டியன், ஒன்றிய துணை தலைவர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பால்குட ஊர்வலம்

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி சார்பில் அவரது கணவர் பாண்டியராஜா மற்றும் இளைய மகன் வக்கீல் சிபி உள்ளமுடையார் துரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

முன்னதாக மாமன்னர் பூலித்தேவனின் குலதெய்வமான உள்ளமுடையார் சாஸ்தா கோவிலில் இருந்து பால்குட ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மாமன்னர் பூலித்தேவன் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஊர் மக்களுக்கு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம்

பூலித்தேவன் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சாகள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்திபாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சிவலிங்கமுத்து, தென்காசி மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் உள்ளார் எஸ்.வி.மூர்த்தி, வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் சீமான் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

பூலித்தேவன் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன், ராஜலட்சுமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அமைப்பு செயலாளர்கள் ஏ.கே.சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், வாசுதேவநல்லூர் ஒன்றிய துணைச்செயலாளர் பொன்.முத்துவேல்சாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

நெற்கட்டும் செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் அ.ம.மு.க. சார்பில் தென்மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்