தமிழக செய்திகள்

முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

நவம்பர் 25ம் தேதி முதல் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, ரெயில்களில் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி முதல், பயணிகள் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மொத்தம் 33 முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு,

வண்டி எண்.(16729, 16730) மதுரை ஜங்சன் - புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(22609, 22610) மங்களூர் சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 6 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16605, 16606) மங்களூர் சென்ட்ரல் - நாகர்கோவில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 6 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12605, 12606) சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 3 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12635, 12636) சென்னை எழும்பூர் - மதுரை வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 3 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16191, 16192) தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 6 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12679, 12680) சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16791, 16792) திருநெல்வேலி ஜங்சன் - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16649, 16650) மங்களூரு செண்ட்ரல் - நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 இரண்டாம் வகுப்பு சேர் கார் இருக்கை பெட்டிகள் மற்றும் 2 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை