சென்னை,
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. 46 மையங்களில் 1. 78 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு காலிப்பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 7,414 பேர் உடல் தகுதி தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் ஆம் தேதி வரை உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.