தமிழக செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் ரெயிலில் அடிபட்டு பலி

திருவிடைமருதூரில், தனது மகனுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் ரெயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பலியானார்.

திருவிடைமருதூர்:

திருவிடைமருதூரில், தனது மகனுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் ரெயிலில் அடிபட்டு ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பலியானார்.

ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர்(வயது 62). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரது இளைய மகனுக்கு நாளை(திங்கட்கிழமை) திருவிடைமருதூரில் திருமணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் வீட்டில் மணமகனுக்கு நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, உறவினர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

ரெயில் அடிப்பட்டு பலி

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.20 மணி அளவில் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ரவிசங்கர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார். ரவிசங்கர் ரயிலில் அடிபட்டதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவிசங்கர் உடல் பாகங்களை சேகரித்து திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுதொடர்பாக கும்பகோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகனுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்