தமிழக செய்திகள்

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் ஜாபர் மற்றும் லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜ மாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

மொத்தமாக ரூ.14.23 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை