தமிழக செய்திகள்

ரூ.56 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

ரூ.56 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தினத்தந்தி

ஆவடி விவேகானந்தா நகர், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் (வயது 52). இவர், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். 2014-ம் ஆண்டு ஜாஸ்மின், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500 பேர்களிடம் தீபாவளி மளிகை சீட்டுக்கு ரூ.50 லட்சம் வரை வசூல் செய்து மோசடி செய்தார்.

மேலும் அவர் சக ஆசிரியை உஷா என்பவரிடம் கடனாக ரூ.6 லட்சம் வாங்கி அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினார். இது குறித்து உஷா கொடுத்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2015-ம் ஆண்டு ஜாஸ்மினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் பண மோசடி செய்த ஜாஸ்மினுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.37.47 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு