தமிழக செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்வு - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும். 2021 மே 31ந்தேதிக்குள் ஓய்வு பெறும் அனைவருக்கும் புதிய ஓய்வு வயது வரம்பு பொருந்தும். தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்