தமிழக செய்திகள்

செங்குன்றம் அருகே பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை - இருவர் கைது

செங்குன்றம் அருகே பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதில் போலீசார் இருவரை கைது செய்தனர்.

தினத்தந்தி

செங்குன்றம்,

செங்குன்றம் அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 26). இவர் மீது மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. குறிப்பாக கஞ்சா மணி என்பவர் கொலை செய்யப்பட வழக்கில் முக்கிய குற்றவாளியாக மதிவாணன் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மதிவாணன் அவரது நண்பர்களுடன் ஹேமநாத் (18), சரத்குமார் (19) தனுஷ் (18) ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மதிவாணனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். மேலும் அவரது நண்பர்களை கத்தியால் தாக்கி விட்டு அந்த கும்பல் ஆட்டோவில் தப்பிச் சென்றது.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 4 கத்தியுடன் ஆட்டோவில் வந்த 2 பேரை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் மதிவாணனை கொலை செய்து விட்டு தப்பித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சோழவரம் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சூர்யா (28),ராம்கி (25) என்பது தெரிய வந்தது. முதல் கட்ட விசாரணையில் கஞ்சா மணி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்தது.மேலும் கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள பிரபாகரன் மற்றும் சீனு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு