தமிழக செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி சூப்பிரண்டு வழங்கினார்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கலந்துகொண்டு, தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 31 பவுன் நகைகளை மீட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, மயிலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், விரல்ரேகை பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் அசார், செல்வராஜ் உள்ளிட்ட 13 பேரை பாராட்டி அவர்களுக்கு நற்சான்று மற்றும் வெகுமதி வழங்கினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்