தமிழக செய்திகள்

புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் என்றும் 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு கரையை கடக்கும் என்றும் புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் இந்த 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புயலானது துறைமுகம் அருகே கடந்து செல்லும் அபாயத்தை இது குறிக்கிறது.

மேலும் சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்