தமிழக செய்திகள்

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பல்வேறு பொதுப்பணிகளில் இருப்பவர்களையும் பாதித்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்ச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்த்திகேயனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்