தமிழக செய்திகள்

நோய் தொற்று அபாயம்

நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் சாலையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கழிவு நீரானது வெளியேற முடியாமல் நீண்ட நாட்களாக தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் நகராட்சியில் நீண்டநாட்கள் புகார் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்