தமிழக செய்திகள்

நதிநீர் இணைப்பு திட்டம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை ஆலோசனை

நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது.

சென்னை,

கோதாவரி - கிருஷ்ணா, கிருஷ்ணா - பெண்ணையாறு, பெண்ணையாறு - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 361 கி.மீ.,க்கு கால்வாய் அமைய உள்ளது.இதனால், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுர், பெரம்பலுர் மாவட்டங்கள் பயன் பெறும்.

இத்திட்டம் தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட கால கனவாக உள்ளது. இத்திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் அறிவிப்பை, பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கோதாவரி-கிருஷ்ணா, பெண்ணாறு- காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை (பிப்ரவரி 18) அவசர ஆலோசனை நடத்த உள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் சந்தீப் சக்சேனா பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு