தமிழக செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தல் தமிழக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தலாக அமையும் தினகரன் பேட்டி

ஆர்.கே.நகர் தேர்தல் தமிழக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தலாக அமையும் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். டி.டி.வி.தினகரனுக்கு சுயேச்சை சின்னங்களில் ஒன்றான பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவரும் பிரசாரம் செய்து வருகிறார். ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் பேசுகையில், ஆர்.கே.நகர் தேர்தல், தமிழக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தலாக அமையும். மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...