தமிழக செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா: யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது பெருமை ஆகுமா?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா: யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது பெருமை ஆகுமா? தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கேள்வி.

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்ததால் தேர்தலை ரத்து செய்தோம் என்று தலைமை தேர்தல் கமிஷனர் கூறியுள்ளார். மகிழ்ச்சி. பணப் பட்டுவாடா நடந்தது அல்லவா... சரி, யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? யார் மீது வழக்கு போடப்பட்டது? யாருக்கு தண்டனை வழங்கப்பட்டது? தேர்தல் முறைகேடு நடந்தது, ஆனால் யாரும் தண்டிக்கப்படவில்லை என்றால், அது எப்படி பெருமைப்படக்கூடிய நடவடிக்கை? தேர்தல் ஆணையம் வாய்ச்சொல் வீரர்கள் என்ற பழி உண்மையல்ல என்பதை சட்டமன்றத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை