தமிழக செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யபட்டது.#TTVDhinakaran

தினத்தந்தி

சென்னை

ஆர்,கே நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைத்துள்ளன. 30 லட்சம் ரூபாய் அந்த தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது

மேலும், தினகரன் சட்டபேரவைக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் முடிவு வெளியான பின் அதை நிறுத்தி வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என கூறி தினகரனுக்கு எதிரான மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

#RKNagar | #TTVDhinakaran | #HighCourt

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்