ஆர்.கே. நகர்,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதில், தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. முன்னிலை பெற்றுள்ளது. ஒரே ஒரு தபால் வாக்கு தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னிலை வகித்து வருகிறார்.