தமிழக செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: 3வது சுற்று முடிவில் 8,835 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் 3வது சுற்று முடிவில் 8,835 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.

தினத்தந்தி

ஆர்.கே. நகர்,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் நடந்து முடிந்த முதல் மற்றும் 2வது சுற்று முடிவுகளின் அடிப்படையில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து 3வது சுற்று எண்ணிக்கை நடந்தது.

இதன் முடிவில் 8,835 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். அவர், 15,868 வாக்குகளை பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 7,033 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இதனை தொடர்ந்து தி.மு.க.வின் மருதுகணேஷ் 3,691 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 737 வாக்குகளுடன் 4வது இடத்திலும் மற்றும் பாரதீய ஜனதாவின் கரு. நாகராஜன் 220 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 1,76,885 ஆகும். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை