சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்றைய தினம் ஆர்.எம்.வீரப்பனின் மகனான சத்தியா மூவிஸ் தலைவர் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் என திரைத்துறையில் பன்முகம் கொண்ட வீ.தமிழழகன் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.
இன்று அவர் நம்முடன் இல்லை என்றாலும் தமிழ் திரை உலகிற்கு காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளாக பாட்ஷா, மூன்று முகம், காக்கிச்சட்டை போன்ற பல படங்களை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் நம்மை ரசிக்க வைத்தவர்.
அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார் உறவினர்கள் மற்றும் சத்யா மூவிஸ் நிர்வாகிகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.