தமிழக செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்

ராஜபாளையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி விலக்கில் இருந்து புனல்வேலி சாலையில் மருத்துவனேரி கண்மாய்க்கு நடுவே செல்லும் சாலையின் இருபுறமும் பேவர் பிளாக் கற்களை கொண்டு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடைமேடை சாலையை விட சுமார் அரை அடி வரை உயரமாக உள்ளது. இதனால் நடை மேடை அமைக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. எனவே நடைமேடையை சாலை மட்டத்திற்கு சமப்படுத்த வலியுறுத்தி புனல்வேலி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், நடைமேடையை சமப்படுத்தவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட 2 பெண்கள் உள்பட 16 பேரை தளவாய்புரம் போலீசார் கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு