தமிழக செய்திகள்

மேம்பாலத்தின் கீழே சாலை சீரமைப்பு பணி

மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழே சாலை சீரமைப்பு பணி

தினத்தந்தி

குழித்துறை, 

மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து வெட்டுமணி செல்லும் சாலையில் மேம்பாலத்துக்கு கீழே குழித்துறை நகராட்சி சார்பில் புதிய குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கப்பட்டது. அதன்பின்பு சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். எனவே சாலைய சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் சந்திப்பு முதல் வெட்டுமணி வரை சாலை சீரமைப்பு பணி நேற்று தொடங்கியது. இதனால் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்லும் அரசு பஸ் மற்றும் இதர வாகனங்கள் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது