தமிழக செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

நாடக கலைஞர்கள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.

தினத்தந்தி

விழுப்புரம்:

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் மற்றும் புதிய பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் நாடக கலைஞர்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களின் நலன் கருதி தலைக்கவசம் அணியுங்கள் என்று, கலை நிகழ்ச்சி மூலமாக அன்போடு எடுத்துக்கூறினாலும், காலம் என்ற எமன் காத்திருக்க மாட்டான் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை