தமிழக செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நெல்லையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தினத்தந்தி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் தொடங்கி வைத்தார். 5-வது தமிழ்நாடு பட்டாலியன் அதிகாரி பாபி ஜோசப் தலைமை தாங்கினார். பேரணியில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ-மாணவிகள், ராணுவ பயிற்சியாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் பேரணியானது பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தொடங்கி துலுக்கர்குளம் கிராமம் வரை சென்று மீண்டும் பல்கலைக்கழகத்தை வந்து அடைந்தது. ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் சிவகுமார் செய்திருந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து