தமிழக செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை நகரில் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுகிறது. நகரில் வீடுகளில் பயன்படுத்தும் கழிவுநீர் குழாய்களின் மூலமாக சிவகங்கை முத்துப்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்படுகிறது. இதற்காக அங்கு நூறு எச்.பி. பவர் கொண்ட மின் மோட்டார்கள் பயன்படுத்துகிறார்கள். அந்த மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் தற்போது குறைந்த அளவு பவர் கொண்ட மோட்டார் மூலம் கழிவு நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் கழிவு நீர் முழுமையாக உறிஞ்ச முடியாமல் தேங்கி உள்ளது.

இந்த கழிவுநீர் நகரின் தாழ்வான பகுதியான இந்திரா நகர் பகுதியில் சென்று தேங்கி நிற்கிறது. மேலும் அருகில் உள்ள வாணியங்குடி கண்மாயிலும் கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வக்கீல் மருது, சகாயம் மற்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பாண்டீஸ்வரி, வட்டாட்சியர் தங்கமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த மக்கள் மறியலை கைவிட்டனர்.