தமிழக செய்திகள்

மூதாட்டி உடலுடன் சாலை மறியல்: போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்த 5 பேர் சிறையில் அடைப்பு

மூதாட்டி உடலுடன் சாலை மறியல் செய்த போது போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்த 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்

பேரையூர்

பேரையூர் அருகே உள்ள சிலைமலைபட்டியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காளியம்மாள் (வயது 65) என்ற மூதாட்டி இறந்தார். காளியம்மாள் உடலை மயான பாதைக்கு கொண்டு செல்ல நிரந்தர மயான பாதை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் மூதாட்டி உடலை வைத்து சாலை மறியல் செய்தனர். இந்த சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் போலீஸ் வாகன கண்ணாடியை உடைத்ததாகவும், பேச்சுவார்த்தைக்கு வந்த அரசு அதிகாரிகளை அவதூறாக திட்டியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆதித்தமிழர் கட்சி பொதுச் செயலாளர் விஸ்வைகுமார் (வயது 40), ஆறுமுகம் (43), சுப்புராஜ் (52), குருசாமி, குமார் (51) ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து காவலில் வைக்கப்பட்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை