கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் குளம் ஒன்று சாலை ஓரம் சுற்றுச்சுவர் ஏதும் இல்லாமல் திறந்தவெளியில் அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் குளத்தில் தவறி விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே வயலூர் ஊராட்சியில் சாலை ஓரம் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.