தமிழக செய்திகள்

சாலையோரம் இறந்து கிடந்தவர் வங்கிக்கணக்கில் ரூ.20 லட்சம்

சாலையோரம் இறந்து கிடந்தவர் வங்கிக்கணக்கில் ரூ.20 லட்சம் இருப்பதை அறிந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை பனகல் சாலையில் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள சாலையோரத்தில் 60 வயதான ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்து கிடந்தவர் அருகே 2 பைகள் இருந்தன. அவற்றை போலீசார் சோதனை செய்த போது, அதில் 2 வங்கி பாஸ் புத்தகங்கள் இருந்தன. அதன் மூலம் அவர், மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராதா (வயது 60) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆய்வகத்தில் வேலை பார்த்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரது கூட்டுறவு வங்கிக்கணக்கில் 20 லட்சத்து 5 ஆயிரத்து 869 ரூபாய் வைப்பு தொகையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர அவர் கடந்த 2019-ம் ஆண்டு அவரது மற்றொரு வங்கி கணக்கில் இருந்து ரூ.36 லட்சம் எடுத்ததும் தெரியவந்தது. எனவே வங்கி பாஸ் புத்தகத்தில் உள்ள முகவரியை வைத்து போலீசார் அவரது உறவினர்களிடம் விசாரித்தனர். இறந்த ராதாவுக்கு திருமணமாகவில்லை. சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.

மேலும் அவருக்கு அண்ணன், தங்கை உள்ளனர். அதை தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவருடைய அண்ணனிடம் போலீசார் விசாரித்த போது, கடந்த 6-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ராதாவை அவருடைய தங்கை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென்று மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில்தான் ராதா, ஆஸ்பத்திரி முன்பு இறந்து கிடந்ததாக வந்த தகவலை தொடர்ந்து இங்கு வந்ததாக தெரிவித்தார். அதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து பின்னர் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு