தமிழக செய்திகள்

பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!

தஞ்சாவூர் அருகே பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் நகை- பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள சோமேஸ்வரபுரம் மேலத் தெருவில் வசிப்பவர் சந்திரகுமார் (வயது 49). இவர் திருச்சி சமயபுரத்தில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குழந்தைகளின் படிப்புக்காகத் தஞ்சாவூரில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான சோமேஸ்வரபுரத்திற்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்து உறவினர்களையும் வீட்டையும் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கமாக வைத்துள்ளார் .

இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவிலிருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20000 பணத்தை திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்து சந்திரகுமார் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் போலீசார் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்