சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 45), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கருங்கல்பட்டி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்தார். பின்னர் அவர் கத்தியை காட்டி மிரட்டி சவுந்திரராஜனிடம் இருந்த ரூ.1,650-யை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.