தமிழக செய்திகள்

கோவையில் மக்களை அச்சுறுத்தி பிடிபட்ட ரோலக்ஸ் யானை உயிரிழப்பு

ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

தினத்தந்தி

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், நரசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் ரோலக்ஸ் யானை சுற்றித்திரிந்தது. அந்த யானை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் 17ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். புள்ளாகவுண்டன்புதூர் அருகே பெரும்பள்ளம் என்ற பகுதியில் யானை பிடிபட்டது.

இதையடுத்து பிடிபட்ட ரோலக்ஸ் யானை பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் யானைகள் முகாமில் விடப்பட்டது. யானையின் கழுத்தில் சிக்னல் பட்டை அணிவித்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், ரோலக்ஸ் யானை இன்று உயிரிழந்தது. வால்பாறை அருகே மந்திரி மட்டம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேச்சலில் இருந்த யானை இன்று மதியம் 2 மணியளவில் ஒரு பெரிய மேட்டில் ஏறியபோது வழுக்கி விழுந்தது. இதில் படுகாயமடைந்த யானை மாலை 4 மணியளவில் உயிரிழந்தது. ரோலக்ஸ் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு