தமிழக செய்திகள்

கோவில் விழாவில் இளவட்ட கல் போட்டி

கோவில் விழாவில் இளவட்ட கல் போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் சிவந்திப்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக நடைபெற்ற இளவட்டக்கல் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இளவட்ட கல்லை தூக்கினர்.

இதில் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 35) என்பவர் 60 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை 2 நிமிடத்தில் 18 முறை தூக்கி எறிந்து முதல் பரிசு பெற்றார். முதல் பரிசு பெற்ற முத்துக்குமாரை மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். இவர் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்