தமிழக செய்திகள்

உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல்

உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூலானது.

தினத்தந்தி

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில் 35 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், காணிக்கையாக ரூ.1 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 784 ரொக்கமும், 3 கிலோ 729 கிராம் தங்கமும், 5 கிலோ 725 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 140-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து