தமிழக செய்திகள்

ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.1¼ லட்சம் பறிப்பு

செஞ்சியில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.1¼ லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செஞ்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சையத்ஜின்னா மகன் சையத்இத்ரிஸ் (வயது 35). மேல்மலையனூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு ஜவுளி விற்பனை செய்த பாது கிடைத்த பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

செஞ்சி மேய்கலவாய்- சந்தை தோப்பு சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது மர்மநபர்கள் 3 பேர் திடீரென சையத்இத்ரிசை வழிமறித்தனர். பின்னர் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்தை மர்மநபர்கள் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

வலைவீச்சு

இதில் அதிர்ச்சி அடைந்த சையத்இத்ரிஸ், இது குறித்து செஞ்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பொதுமக்கள் போக்குவரத்து அதிகமுள்ள இடத்தில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் இருந்து பணத்தை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை